இடம் மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிகள்: எத்தனை கோடி இழப்பு
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் 7 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் ஒரு போட்டி மட்டுமே சென்னையில் நடத்தப்பட்ட நிலையில் போராட்டம் காரணமாக எஞ்சிய 6 ஆட்டங்களும் புனேக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் தமிழக அரசுக்கும், மாநில கிரிக்கெட் சங்கத்துக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி. வரி என பலவிதங்களில் வருமானம் வரும்.
அப்படி 6 ஆட்டங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டதால் தமிழக அரசுக்கு ரூ.4.8 கோடி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.3 கோடி என்று மொத்தம் ரூ.7.8 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இடம் மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிகள்: எத்தனை கோடி இழப்பு
Reviewed by Author
on
April 13, 2018
Rating:

No comments:
Post a Comment