மன்னாரில் சமூகமயப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு தொழில்சார் உபகரணங்கள் வழங்கி வைப்பு-படங்கள்
மன்னாரில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு (சமூகமயப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு) பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்க்கான தொழில்சார் உபகரணங்கள் வழங்கி வைப்பு
மன்னாரில் இன்று காலை 9-30 மணியளவில் மாவட்டசெயலகத்தின் மண்டபத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரத்னாயக்க அவர்களுடன் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் S.குணபாலன் பிரதேச செயலாளர் M.பரமதாசன் பிரதமகணக்காளர் அவர்களுடன் மன்னார் மாவட்ட புனர்வாழ்வு நலன்புரி நிலையத்தின் இணைப்பதிகாரி லெப்டினன் கேணல் சிரந்த குணவர்த்தன
அழைக்கப்பட்ட அதிகாரிகள் சுமார் 519 பயனாளிகள் பணியாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சுமார் 250 இலட்சம் ரூபா செலவில் 519 மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த சமூகமயப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினையும் பொருளாதாரத்தினையும் கருத்தில் கொண்டு தொழில் வாய்ப்பினை அமைத்துக்கொள்ளும் விதமாக
- மீன்பிடி வலைத்தொகுதிகள்
- துவிச்சக்கர வண்டிகள்-200
- தையல் இயந்திரங்கள்
- நீரி இறைக்கும் மோட்டர்கள்
- புகைப்பட கருவிகள்
- கணனிகள்
- கூரைத்தகடுகள்
- மேசன் கட்டிட உபகரணங்கள் போன்ற பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வின் சாரம்சமாக பணிப்பாளர் அவர்களின் உரையில் மட்டக்களப்பு திருகோணமலை பகுதிகளில் இவ்வாறு உபகரணங்களையும் வழங்கிவைத்துள்ளோம் ஆனால் மன்னாரில் உள்ள பயனாளிகளுக்குதான் அதிகமாக பொருட்களைவழங்கியுள்ளோம்
- சிறுகடன் திட்டம்
- வீட்டுத்திட்டம்
- தனியான அமைச்சும் சமூக நலன்புரி நிலையம் அமைக்க எண்ணியுள்ளோம்
- தொழில்முயற்ச்சிட்டம் -(வாழ்வாதாரத்திற்கான தொழில் முயற்சியையும்முன்னேற்ற பொருளாதாரப்பிரச்சினைகள் தீர்க்க எண்ணியுள்ளோம்)இவ்வாறான பலவகையான திட்டங்களை வகுத்து அமைச்சின் செயலாளர்களுடன் இணைந்து வளமான வாழ்வுக்கான செயல்திட்டங்களை செயலாற்றுவோம். என்றார்.
மன்னாரில் சமூகமயப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு தொழில்சார் உபகரணங்கள் வழங்கி வைப்பு-படங்கள்
Reviewed by Author
on
April 10, 2018
Rating:

No comments:
Post a Comment