இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? கவனமாக இருங்கள் -
உடலிலிருந்து மிக அதிகமாக வெளியேறும்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதிகமாக உடலில் இருந்து நீர் வெளியேறுவதால் ஏற்படும் நோய்க்கு நீர்ப்போக்கு (Dehydration) என்று பெயர்.
ஒருவருக்கு இந்த நீர்ப்போக்கு பிரச்சனை இருப்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்
உலர்ந்த கண்கள்
அதிக நேரம் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து அதிகபடியான வியர்வைகளும், திரவமும் வெளியேறுகிறது. இப்படி அடிக்கடி நடக்கும் பட்சத்தில் நீர்ப்போக்கு பிரச்சனை வரலாம். இந்த பிரச்சனை வந்தவர்களுக்கு கண்கள் உலர்ந்து மற்றும் பார்வை மங்கல் போன்ற அறிகுறிகள் தென்ப்படும்.மனக்குழப்பம்
நீர்ப்போக்கு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனகுழப்பம் அதிகம் இருக்கும். மேலும், ஒருவித நம்பிக்கையின்மை எல்லா விடயத்திலும் ஏற்படும். இந்த அறிகுறிகள் பெரியவர்கள், சிறியவர்கள் என எல்லோருக்கும் பொருந்தும்.சிறுநீர் நிறம் மாறுதல்
நீர்போக்கு பிரச்சனை இல்லாதவர்களுக்கு சிறுநீர் சாதாரண இளம் மஞ்சள் நிறத்தில் போகும். அதுவே இதில் பாதிக்கப்பட்டிருந்தால் மஞ்சள் நிறத்தில் தன்மை மிக இருண்டு இருக்கும். சிலருக்கு சிறுநீருடன் சேர்ந்து இரத்தமும் வரலாம்.வாய் உலர்ந்து போதல்
வாய் அடிக்கடி உலர்ந்து போனாலோ அல்லது நாக்கு வீக்கம்மாக இருத்தல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு அடிக்கடி தோன்றினாலும் நீர்போக்கு பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும். உடனே மருத்துவரை அனுகுவது நல்லது.உடல் சூடு அல்லது ஜூரம்
எவ்வள்வு குளிர்ச்சியான பொருளை சாப்பிட்டாலும் உடல் உஷ்ணமாகவே இருந்தால் அவர்களுக்கு நீர்போக்கு பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும். மேலும் அடிக்கடி காய்ச்சல் வந்தாலும் அது இதற்கான அறிகுறிகள் தான்.வியர்வை
இது தான் இந்த நீர்போக்கு நோயின் முக்கிய அறிகுறியாகும். தாங்க முடியாத அளவுக்கு அதிக வியர்வை வந்தால் உடனே மருத்துவர்களிடம் செல்வது நலம் தரும்.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? கவனமாக இருங்கள் -
Reviewed by Author
on
April 16, 2018
Rating:

No comments:
Post a Comment