சித்திரை புத்தாண்டில் கைவிசேடம் கொடுக்க, வாங்க உகந்த சுப நேரங்கள் இதோ!
பிறக்கின்ற தமிழ் புத்தாண்டாகிய விளம்பி வருடமானது 14-04-2018 சனிக்கிழமை காலை 7 மணிக்கு பிறக்கின்றது.
பிறக்கும் வருடத்தில் அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணிவரையுள்ள புண்ணிய காலத்தில் மருத்து நீர் வைத்து நீராடி புத்தாடை அணிந்து குலதெய்வ வழிபாடுகளை இயற்றி பெரியோர்களின் ஆசிகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.
இன்றையதினம் காலை 7.40 தொடக்கம் 8.30 மணிவரைக்கும், பகல் 12.15 தொடக்கம் 2.10 மணிவரைக்கும் , மாலை 6.22 தொடக்கம் 8.12 மணிவரைக்கும் , சித்திரை 3 ம் நாள் திங்கள்கிழமை காலை 7.45 தொடக்கம் 8.50, மணிவரையும் பகல் 12.30 தொடக்கம் 2.மணிவரையும், மாலை 6.10தொடக்கம் 7.20 வரையும் உள்ள புண்ணிய காலத்தில் கைவிசேடத்தினை பெரியவர்கள் குருமார்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.
அறுசுவை உணவுண்டு இயலாதவர்களுக்கு உதவிகள் புரிந்து வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று இந்த புது வருடத்தில் இன்புற்று வாழ்வோமாக.
சித்திரை புத்தாண்டில் கைவிசேடம் கொடுக்க, வாங்க உகந்த சுப நேரங்கள் இதோ!
Reviewed by Author
on
April 14, 2018
Rating:
Reviewed by Author
on
April 14, 2018
Rating:


No comments:
Post a Comment