மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப் துரம் அவர்களின் மணி விழா நிகழ்வு-(படம்)
மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப் துரம் அவர்களின் மணி விழா நிகழ்வு நேற்று திங்கட்கிழமை(9) மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சகல உள்ளுராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் இணைந்து குறித்த மணி விழா நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன் போது பல வருடங்களாக மக்கள் பணியாற்றிய மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப் துரம் கௌரவிக்கப்பட்டு அவரின் சேவை நலனை பாரட்டும் வகையில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், பிரதேசச் செயலாளர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப் துரம் அவர்களின் மணி விழா நிகழ்வு-(படம்)
Reviewed by Author
on
April 12, 2018
Rating:

No comments:
Post a Comment