வெளிநாட்டில் இன்னொரு ஆணுடன் காதலி! கோரமாக கொலை செய்த இலங்கை இளைஞன் -
மத்திய கிழக்கு நாடான ஷார்ஜா குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவர் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார்.
காதலியை கொலை செய்த குற்றச்சாட்டில் 30 வயதான இலங்கையர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர், அந்த நாட்டில் பெண் ஒருவருடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார். எனினும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரினால் குற்றவாளியாக நீதிமன்றில் அறிவித்துள்ள போதிலும், குறித்த இலங்கையர் குற்றச்சாட்டை நிராகரித்து வருகிறார்.
இந்த வழக்கு நீதிபதி மொஹமட் அபு பக்கருக்கு முன்னால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
விற்பனை முகவராக பணியாற்றும் குறித்த இலங்கையர் உயிரிழந்த பெண்ணுடன் அறையை பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன் அந்த பெண்ணுடன் கடந்த வருடங்களாக தொடர்பில் இருந்த நிலையில் அவரை திருமணம் செய்ய தீர்மானித்துள்ளார்.
பகுதி நேரம் வேலை செய்யும் பெண் Ajman பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது இந்த பெண் தவறான தொழில் செய்வதாக இலங்கையருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய Ajman பகுதிக்கு சென்ற இலங்கையர் வீடு ஒன்றின் கதவை தட்டிய போது ஆண் ஒருவர் கதவை திறந்துள்ளார். அதன் பின்னர் தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணும் அங்கிருந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் இலங்கையர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ள நிலையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்தும் இடம்பெறும் என நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
வெளிநாட்டில் இன்னொரு ஆணுடன் காதலி! கோரமாக கொலை செய்த இலங்கை இளைஞன் -
Reviewed by Author
on
April 10, 2018
Rating:

No comments:
Post a Comment