அண்மைய செய்திகள்

recent
-

சேலை உலக மகா ஆபாசமா? என்ன சொல்கிறது தமிழ் இளைஞர் சேனை -


திருகோணமலை - ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி விடயம் தொடர்பில் அகில இலங்கை தௌகீத் ஜமாத் எனும் அமைப்பினால் சம்மாந்துறையில் 'இன நல்லுறவினை சீர்குலைப்பதற்கு எதிராக' எனும் தொனியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன தாய்மார்களும், பெண்களும், சகோதரிகளும் பாரம்பரியமாக அணித்து வரும் சேலையினை 'உலக மகா ஆபாச ஆடை சேலை' என சித்தரித்து பதாதைகளை இட்டு எமது நாட்டுப் பெண்கள் அணியும் ஆடையினை கேவலமாக சித்தரித்தமைக்கு எதிராக தமிழ் இளைஞர் சேனை தமது வன்மையான கண்டனத்தினை தெரிவிக்கின்றது.

இவ்வாறு இன்று கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை விடுக்கும் கண்டன ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் மூவினங்களும் தொன்று தொட்டு அணியும் பாரம்பரிய கலாச்சார ஆடையினை (சேலை) ஒரு இனத்தின் கலாச்சார குறியீடாக அடையாளப்படுத்தி அதனை கொச்சைப்படுத்தும் அறிவீனத்தினை நினைத்து நாம் வருந்துகின்றோம்.

ஒரு இடத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு உரிமை மீறப்படின், உணர்வு புண்படுத்தப்பட்டிருப்பின் அது தொடர்பில் ஜனநாயக ரீதியில் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்ப்பவர்களல்ல.
எனினும் ஒட்டுமொத்த பெண்களின் மானம் காக்கும் சேலையினை 'உலக மகா ஆபாச ஆடை சேலை என சித்தரித்தமை எமது நாட்டின் ஒட்டு மொத்தப் பெண்களையும் பாரம்பரியத்தையும் கொச்சைப்படுத்திய செயலாகும்.
இந்த கீழ்த்தரமான செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என்பதனை சுட்டிக்காட்டுக்கின்றோம்.
எனவே உண்மையான நோக்கத்தினை சீர்குலைத்து பதாதைகளை இட்டமையினை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களிலாவது குரோத மனப்பான்மையை களைந்து சிந்தித்து செயலாற்ற வேண்டுமென அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலை உலக மகா ஆபாசமா? என்ன சொல்கிறது தமிழ் இளைஞர் சேனை - Reviewed by Author on April 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.