பிறந்தது சித்திரை........பறந்தது நித்திரை......
பிறந்தது சித்திரை........பறந்தது நித்திரை......
பிறந்தது சித்திரை
பறந்தது நித்திரை
மறந்திடுங்கள் துக்கத்தை
திறந்திடுங்கள் மனதை
தை போக வந்திருக்கு சித்திரை
கதை சொல்ல ஓடுது கனவுக்குதிரை
எதை முதல் சொல்ல உரை-தமிழ்
சதையெங்கும் நுரை
கதிரை சண்டை முடிந்தது
இரை தேடும் கூட்டம்-தமிழ் உரிமையில்
திரை போட்டு தினமும் ஆடுது
சதிராட்டம்.....தவசிவேடத்தில்
பட்டாடை பட்டாசு
புதுப்பானை பொங்கலிட்டு
செங்கரும்போடு சேர்ந்து
தித்திதிப்பாய் திங்கும் போதுகூட
காணாமல் போன.....
காணியில்லாமல் வீதியில்
சிறையில் வாடுகின்ற....
சின்னஞ் சிறுகள் தாயும் தந்தையும் இன்றி
தனிமையில்வாடுகின்ற.......
இன்னும் எத்தனை உறவுகள்
எம்மத்தியில் வாழ்கின்றபோது
எம் புத்தியில் ஏன்........
சித்தப்பிரமை பிடித்து போல
சத்தமின்றி முத்தமிடுகின்றோம்
சலுகைகளையும் சல்லாபங்களையும்
சந்திக்கும் போது
சிந்திக்கும் படி பேசி......
முந்திக்கொள்கின்றோம்-உயர்
பந்திக்கும் பந்திக்கும்.....சந்ததிக்கும்
எப்போது விடுதலை என்று
ஏங்குகின்றபோது-உறவுகள்
எம் எண்ணத்தில் என்னவோ.....
எனி கொண்டாட இருக்கும் தீபாவளிதான்
என்றும் தீராத வலிகளோடு........
வழிந்தோடும் கண்ணீரோடு........
கவிஞர்-வை-கஜேந்திரன் -
பிறந்தது சித்திரை
பறந்தது நித்திரை
மறந்திடுங்கள் துக்கத்தை
திறந்திடுங்கள் மனதை
தை போக வந்திருக்கு சித்திரை
கதை சொல்ல ஓடுது கனவுக்குதிரை
எதை முதல் சொல்ல உரை-தமிழ்
சதையெங்கும் நுரை
கதிரை சண்டை முடிந்தது
இரை தேடும் கூட்டம்-தமிழ் உரிமையில்
திரை போட்டு தினமும் ஆடுது
சதிராட்டம்.....தவசிவேடத்தில்
பட்டாடை பட்டாசு
புதுப்பானை பொங்கலிட்டு
செங்கரும்போடு சேர்ந்து
தித்திதிப்பாய் திங்கும் போதுகூட
காணாமல் போன.....
காணியில்லாமல் வீதியில்
சிறையில் வாடுகின்ற....
சின்னஞ் சிறுகள் தாயும் தந்தையும் இன்றி
தனிமையில்வாடுகின்ற.......
இன்னும் எத்தனை உறவுகள்
எம்மத்தியில் வாழ்கின்றபோது
எம் புத்தியில் ஏன்........
சித்தப்பிரமை பிடித்து போல
சத்தமின்றி முத்தமிடுகின்றோம்
சலுகைகளையும் சல்லாபங்களையும்
சந்திக்கும் போது
சிந்திக்கும் படி பேசி......
முந்திக்கொள்கின்றோம்-உயர்
பந்திக்கும் பந்திக்கும்.....சந்ததிக்கும்
எப்போது விடுதலை என்று
ஏங்குகின்றபோது-உறவுகள்
எம் எண்ணத்தில் என்னவோ.....
எனி கொண்டாட இருக்கும் தீபாவளிதான்
என்றும் தீராத வலிகளோடு........
வழிந்தோடும் கண்ணீரோடு........
கவிஞர்-வை-கஜேந்திரன் -
பிறந்தது சித்திரை........பறந்தது நித்திரை......
Reviewed by Author
on
April 15, 2018
Rating:

No comments:
Post a Comment