சர்க்கரை நோயின் வீரியத்தை குறைக்கும் பாட்டி வைத்தியம் -
இதற்கான பாட்டி வைத்தியங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸைக் குடியுங்கள். இந்த ஜூஸ் தயாரிக்க, 2-3 பாகற்காயை எடுத்து விதைகளை நீக்கிவிட்டு, அரைத்து வடிகட்டி, வேண்டுமானால் நீர் சேர்த்து குடியுங்கள். இப்படி குறைந்தது 2 மாதம் தினமும் காலையில் குடியுங்கள்.
- ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை, 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் குடித்து வர வேண்டும்.
- 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து வெந்தயத்தை அப்படியே உட்கொள்ளுங்கள். இச்செயலை தொடர்ந்து சில மாதங்கள் தவறாமல் பின்பற்றினால், க்ளுக்கோஸ் அளவு குறையும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொய்யாவின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதே நல்லது.
- 2-3 நெல்லிக்காயின் விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து. ஒரு துணியில் அந்த பேஸ்ட்டைப் போட்டு வடிகட்டி, வரும் சாற்றில் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து 1 டம்ளர் நீரில் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- 10-15 மாவிலைகளை ஒரு டம்ளர் நீரில் இரவு படுக்கும் முன் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- 1 1/2 டீஸ்பூன் பிரியாணி இலை பொடி மற்றும் மஞ்சள் தூளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்தது கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தினமும் இரண்டு முறை என, மதியம் மற்றும் இரவு உணவிற்கு முன் உட்கொள்ளுங்கள்.
- சிறிது வெண்டைக்காயை எடுத்து, அதன் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, ஆங்காங்கு லேசாக கீறி விடுங்கள். பின் அதை ஒரு டம்ளர் நீரில் ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெண்டைக்காயை நீக்கிவிட்டு, நீரை மட்டும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இப்படி தினமும் என பல வாரங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
சர்க்கரை நோயின் வீரியத்தை குறைக்கும் பாட்டி வைத்தியம் -
Reviewed by Author
on
April 17, 2018
Rating:

No comments:
Post a Comment