அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை வரவுள்ள புனித சாராநாத் பௌத்த புராதன சின்னங்கள்!!!





வெசாக் பண்டிகை காலத்தில் பொதுமக்களின் பார்வைக்காக சாராநாத்திலிருந்து மிகவும் புனிதமான பௌத்த சின்னங்கள் இலங்கை கொண்டு வரப்படவுள்ளதாக  கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.



இந்தியாவிலிருந்து இந்த புனித சின்னங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறை என்பதுடன் இதற்காக இந்திய அரசாங்கத்தால் விசேட  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த புனித சின்னங்களுக்கான தங்களது வணக்கங்களை எதிர்வரும்  28ஆம் திகதியிலிருந்து மே மாதம் 2ஆம் திகதி வரை கொழும்பு அலரிமாளிகையில் செலுத்துவதற்கு முடியும்.

சாராநாத் புனித சின்னங்கள் இலங்கையில் காட்சிப்படுத்துல் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஓர் ஆன்மீக பந்தத்தை உருவாக்குவதுடன் இவ்விரு நாடுகளின் பகிர்ந்து கொள்ளும் பௌத்த பாரம்பரியத்தின் மற்றுமோர் வெளிப்படுத்தலாக உள்ளது.

சாராநாத் புனித சின்னங்கள் இந்தியாவிலுள்ள சாராநாத்தில் "முலகன்ட்காகுடி" பௌத்த விகாரையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புத்த பெருமான் தனது முதலாவது போதனைளை அங்கே நடத்தியதினால் சாராநாத் வரலாற்று ரீதியாக முக்கியமான இடமாகவுள்ளது. இந்தியாவிலுள்ள மகாபோதி சங்கத்தின் ஸ்தாபகர் அநகாரிக தர்மபால சாரநாத்தின் பெருமையை மீள் ஸ்தாபிப்பதற்கு முலகன்ட்காகுடி பௌத்த விகாரையைக் கட்டுவதில் ஒரு முக்கியமான பங்கினை வகித்தார்.  இந்த நிலமும் புனித சின்னங்களும் இந்திய அரசாங்கத்தினால் இந்திய மகாபோதி சங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



விசேடமாக செய்யப்பட்ட ஒரு பேழை மிகவும் பவித்திரமான மற்றும் உண்மையான இந்த இரண்டு சின்னங்களையும் பாதுகாக்கின்றது. வெள்ளிப் பேழையில் வைக்கப்பட்டு விகாரையில் பாதுகாக்கப்படும் முதலாவது சின்னம், 1913-14 ஆம் ஆண்டுகளில் சேர் ஜோன் மார்ஷல் என்பவரினால் புராதன நகர் தக்சிலாவிற்கு  அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவை, தர்மராஜிக்கா தாதுகோபுரத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு சிறிய பௌத்த வழிபாட்டுத் தலத்தில் ஒரு வெள்ளிப் பேழையினுள் 136 வருட திகதிக் குறிப்பிடுதலுடன் (ஏறத்தாழ கி.பி 79 வருடங்கள்) கண்டுபிடிக்கப்பட்டது. அவை ஆசீர்வதிக்கப்பட்டவற்றின் புனித சின்னங்களாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன.

சாராநாத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள இரண்டாவது சின்னம் இந்திய தொல்பொருளாராய்ச்சியாளரான திரு. ஏ.எச்.லோங்ஹேர்ஸ்ட் என்பவரால் 1929 ஆம் ஆண்டு மெட்ராஸ் ஆளுகைக்குட்பட்ட குந்தூர் மாவட்டத்தில் உள்ள நாகார்ஜூனக்கொண்டாவிலுள்ள ஒரு பெரிய தாதுக் கோபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சின்னம் கண்டுபிடிக்கப்பட்ட தாதுக் கோபுரம் ஆசீர்வதிக்கப்பட்டவற்றின் மகாசைத்யர் அல்லது வேறு வகையில் ‘பெரிய தாதுக்கோபுரம்’ என விபரிக்கப்படுகிறது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பில் புனித பௌத்த சின்னங்களைக் காட்சிப் படுத்துவதற்கு தந்துதவியமைக்காக இந்திய மகாபோதி சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கின்றது.

இலங்கையில் புத்த பெருமானின் புனித சின்னங்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இரண்டாவது தடவை மேற்கொண்டுள்ளது. அத்தகைய ஒரு முதலாவது முன்னெடுப்பு 2012ஆம் ஆண்டு கபிலவஸ்து புனிதசின்னங்களின் காட்சிப்படுத்தலின் போது மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை வரவுள்ள புனித சாராநாத் பௌத்த புராதன சின்னங்கள்!!! Reviewed by Author on April 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.