கையினை தொடுதிரையாக மாற்றும் ஸ்மார்ட் கடிகாரம் -
இதனை எடுத்துக்காட்டும் முகமாக ஸ்மார்ட் கடிகாரங்களில் மற்றுமொரு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.
அதாவது சிறிய ரக புரஜெக்டர் ஒன்று இணைக்கப்பட்டு காட்சிகளை கையின் மீது உருவாக்கக்கூடியதாக இருக்கின்றது.
அதுமட்டுமன்றி கையினையே தொடுதிரையாக செயற்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றமை விசேட அம்சமாகும்.
LumiWatch என அழைக்கப்படும் இந்த கடிகாரத்தின் மாதிரியானது Carnegie Mellon பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் விசேட புரஜெக்டர் மற்றும் உடலை தொடுதிரையாக மாற்றக்கூடிய சென்சார் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Android 5.1 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கடிகாரமானது ப்ளூடூத் மற்றும் வைபை தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.
இதில் Qualcomm 1.2 GHz Quad-Core CPU, பிரதான நினைவகமாக 768MB RAM, 4GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
கையினை தொடுதிரையாக மாற்றும் ஸ்மார்ட் கடிகாரம் -
Reviewed by Author
on
April 30, 2018
Rating:

No comments:
Post a Comment