2020இல் ஜனாதிபதி தேர்தல்! நாட்டுக்கு இது இறுதியான சந்தர்ப்பம் -
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலாக அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி வருவதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
சைட்டம் மாணவர், பெற்றோர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலர் நேற்று எல்லே குணவங்சவை சந்திக்க சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்க போகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குணவங்ச தேரர்,
தன்னிடம் 5 கோரிக்கைகள் இருப்பதாகவும் அந்த கோரிக்கைகளை கண்டி தலதா மாளிகையில் உள்ள புத்தரின் புனித தந்தத்தின் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளும் நபருக்கு தான் ஆதரவு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
நாட்டில் அரசியலுக்கு அப்பால் சென்று நாட்டின் நலன் குறித்து சிந்தித்து செயற்படும் ஒருவர் நாட்டின் தலைவராக வரவேண்டும். நாட்டுக்கு இது இறுதியான சந்தர்ப்பம்.
தற்போதைய அரசாங்கம் வெள்ளையர்களின் சொல் கேட்டு செயற்படும் அரசாங்கம். இதனால், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை எனவும் எல்லே குணவங்ச குறிப்பிட்டுள்ளார்.
2020இல் ஜனாதிபதி தேர்தல்! நாட்டுக்கு இது இறுதியான சந்தர்ப்பம் -
Reviewed by Author
on
May 14, 2018
Rating:

No comments:
Post a Comment