கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நடத்திய நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் 456 தொண்டராசிரியர்கள் தகுதிபெற்றுள்ளதாக கல்வி அமைச்சு."
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நடத்திய நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் 456 தொண்டராசிரியர்கள் தகுதிபெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வியமைச்சின் இணையத்தளத்தில் தகுதியான தொண்டராசிரியர்களின் பெயர்விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தேவையானால் இப்பட்டியல் மாற்றியமைக்கப்படலாம்.
இது தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னராக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கு முறையீடு செய்யலாம்.
தோற்றியவர்களில் யாராவது தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதெனக்கருதினால் மேன்முறை செய்யலாம். அதேவேளை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு இருந்தாலும் மேன்முறையீடு செய்யலாம்.
2007முதல் 3வருடங்களில் தொடர்ச்சியாக சேவையாற்றிய 50வயதுக்கு குறைந்த தொண்டராசிரியர்கள் சகல ஆவணங்களையும் நேர்முகப்பரீட்சையில் சமர்ப்பித்தவர்கள் தகுதியானவர்களாக தெரிவாகியுள்ளனரென கல்வியமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேன்முறையீட்டுக்குப் பின்னர் இந்தப்பட்டியல் மத்திய கல்வியமைச்சுக்கு அனுப்பிவைக்கபட்டு பின்னரே நியமனம் வழங்குவது தொடர்பாக அறிவிக்கப்படுமென்றும் தெரவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நடத்திய நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் 456 தொண்டராசிரியர்கள் தகுதிபெற்றுள்ளதாக கல்வி அமைச்சு."
Reviewed by Author
on
May 12, 2018
Rating:
Reviewed by Author
on
May 12, 2018
Rating:


No comments:
Post a Comment