அண்மைய செய்திகள்

recent
-

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 6 மாதம் சிறை -


பெற்றோரின் வயது மூப்பு காரணமாக, அவர்களைச் சரிவர கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு விதிக்கப்படும் மூன்று மாத சிறைத் தண்டனையை, ஆறு மாதமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிகமாக சம்பாதிக்கும் பிள்ளைகள், அதற்கேற்ப தங்களின் பெற்றோருக்குப் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மூத்த குடிமக்களின் நேரடி வாரிசுகள் மற்றும் பேரக் குழந்தைகள் மட்டுமல்லாமல் வளர்ப்பு மகன்கள், அவர்கள் வழி பேரக் குழந்தைகள் என பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களையும், அவர்களது காப்பாளராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, பெற்றோருக்கு அவரின் பிள்ளைகள் மாதம் தோறும் ரூபாய் பத்து ஆயிரம் பராமரிப்பு தொகையாக வழங்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. இந்தச் சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒப்புதலுக்குப்பின் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 6 மாதம் சிறை - Reviewed by Author on May 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.