அதர்வா சின்ன படங்களுக்காக செய்த செயல் -
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அதர்வா. தற்போது கண்ணன் இயக்கத்தில் பூமராங் படத்தில் நடித்து வருகிறார்,
இந்நிலையில் இவர் நடிப்பில் செம போதை ஆகாதே படம் ரெடியாகி பல மாதங்கள் ஆனது.
இந்த படத்தை கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவேண்டியது. ஆனால் சில காரணங்களால் மீண்டும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார் அதர்வா. இந்நிலையில் இன்று விஷால் நுங்கம்பாக்கம் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அதர்வாவுக்கு நன்றி தெரிவித்தார்,
அதர்வாவை பற்றி விஷால் கூறுகையில், தம்பி அதர்வா நடித்த செம போதை ஆகாதே படம் 25 ம் தேதி ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் அதே தேதியில் 7 சிறு படங்கள் வெளியாகவுள்ளன. இதை பற்றி நான் அதர்வாவிடம் கூறிய போது பரவலானா என் படத்தை ஜூன் 14 ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று பெருந்தன்மையோடு அதர்வா கூறினார் என விஷால் தெரிவித்தார்.
 அதர்வா சின்ன படங்களுக்காக  செய்த செயல் - 
 
        Reviewed by Author
        on 
        
May 22, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
May 22, 2018
 
        Rating: 


No comments:
Post a Comment