மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திடீர் என தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி-(படம்)
இளைஞர் ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திடீர் என தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சிறிது நேரம் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று புதன் கிழமை(16) காலை 10.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.மன்னார் பஸார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலக முன் வீதியூடாக இளைஞர் ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டியில் திடீர் என தீப்பற்றியுள்ளது.
இதன் போது குறித்த இளைஞர் மாவட்டச் செயலகத்திற்கு முன் முச்சக்கர வண்டியை உடனடியாக நிறுத்தி விட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.
இதன் போது அருகில் இருந்தவர்கள் என பலர் வந்து தீயை கட்டுப்படுத்த முடிற்றி செய்த போதும் உடனடியாக நீரை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
உடனயடிhக மன்னார் மாவட்டச் செயலகத்திற்குள் சென்று தீயை கட்டுப்படுத்த தீ அணைப்பு உதவியை நாடிய போதும் அங்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.
சிறிது நேரத்தின் பின் மன்னார் நகர சபையூடாக பௌசர் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு நீண்ட நேரத்தின் பின் தீ அனைக்கப்பட்டது.
எனினும் முச்சக்கர வண்டி முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட திடிர் மின் ஒழுக்கின் காரணமாகவே தீப்பற்றியுள்ளதாக தெரிய வருகின்றது.
-இதனால் குறித்த பாதையூடாக நீண்ட நேரம் போக்குவரத்து பாதீக்கப்பட்டதோடு, அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது.
எனினும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து வீதி ஒழுங்குகளை மேற்கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் திடீர் தீ அனர்த்தங்களின் போது நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவசர தீ அணைப்பு சேவைகள் இல்லாமையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், அவசர தீ அணைப்பு சேவை இருந்திருந்தால் குறித்த முச்சக்கர வண்டியை தீயில் இருந்து காப்பாற்றி இருக்க முடியும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திடீர் என தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி-(படம்)
Reviewed by Author
on
May 16, 2018
Rating:

No comments:
Post a Comment