எழுத்தாளர் பாலகுமாரன் இழப்புக்கு கண்ணீர் விட்டு அழுத....
எழுத்து உலகில் தனக்கென்று தனி முத்திரையை பதித்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார், இவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, பாட்ஷா, குணா, முகவரி, சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் பாலகுமாரன். இவர் உடல்நல குறைவால் நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
சென்னை மயிலாப்பூரில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதன் பின் பேசிய ரஜினிகாந்த், பாலகுமாரன் தன் நண்பர் மற்றும் சிறந்த எழுத்தாளர் என கூறினார். மேலும் பாட்ஷா படத்திற்கு பின் வேறு படத்திற்கு வசனம் எழுத வைக்க முயற்சித்தேன். அப்போது இலக்கியமும் ஆன்மிகமும் தான் தனது உலகம் என கூறி மறுத்துவிட்டாராம். புகழையோ பணத்தையோ தேடி போகாதவர் பாலகுமாரன், அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என ரஜினி உருக்கமாக தெரிவித்துள்ளார்.எழுத்து உலகில் பெரிய பொக்கிஷம் என்று ரஜினி பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.
ரஜினி நடிப்பில் வெளிவந்த பாட்ஷா படத்தின் வசனகர்த்தாவாக இருந்தவர் பாலகுமாரன். ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி என்ற வசனத்துக்கு சொந்தக்காரர். அதுமட்டுமில்லாமல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை படத்தின் வசனமும் இவரின் கைவண்ணம் தான்.
அவர் இழப்பை சாதாரணமாக என் கண்ணீர் அஞ்சலி என்று முடித்துவிட முடியாது எனக்கு உண்மையான ஆன்மிகம் கற்றுக் கொடுத்த புண்ணிய ஜீவன். கருகி கதறி அழத்தான் முடியும் என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் அட்லீ நேரில் சென்று அவரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பாலகுமாரன் மகன் சூர்யா பாலகுமாரன் அட்லீயிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். பாலகுமாரன் அவர்களை பல வருடங்களாக அட்லீக்கு பழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது .

எழுத்தாளர் பாலகுமாரன் இழப்புக்கு கண்ணீர் விட்டு அழுத....
Reviewed by Author
on
May 16, 2018
Rating:

No comments:
Post a Comment