உலகமே எதிர்பார்த்த கிம் ஜாங் உன் - டிரம்ப் பேச்சுவார்த்தை ரத்து:
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அதிகாரி ஒருவர், தற்போதைய சூழலில் கிம் ஜாங் உன் மற்றும் டிரம்ப் சந்தித்து பேசும் வாய்ப்பு இல்லை எனவும், ஆனால் கண்டிப்பாக எதிர்காலத்தில் நடக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே உடனான சந்திப்புக்கு பின்னரே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி அணு ஆயுதங்களை ஒருதலைப்பட்சமாக கைவிட அமெரிக்கா வலியுறுத்தும் எனில் இந்த சந்திப்பை ரத்து செய்வதை விட வேறு வழி இல்லை என வடகொரியாவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது.வடகொரியாவுடனான சந்திப்புக்கு அமெரிக்க தரப்பு இதுவரை எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை, இருப்பினும் ஆணு ஆயுத ஒழிப்பே முக்கிய காரணியாக இருக்கும் என தகவல் வெளியானது.
கடந்த ஏப்ரல் மாதம் இரு கொரிய தலைவர்களும் முதன் முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,
எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியுடன் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் நாட்டில் சந்தித்து பேச இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.மட்டுமின்றி குறித்த சந்திப்புக்கு முன்னதாக அமெரிக்க கைதிகள் மூவரை வடகொரியா விடுதலை செய்துள்ளதுடன்,
இந்த வாரம் அந்த நாட்டின் அணு ஆயுத சோதனை கூடத்தை சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் அகற்றவும் வடகொரியா திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகமே எதிர்பார்த்த கிம் ஜாங் உன் - டிரம்ப் பேச்சுவார்த்தை ரத்து:
Reviewed by Author
on
May 23, 2018
Rating:
Reviewed by Author
on
May 23, 2018
Rating:


No comments:
Post a Comment