மன்னார் மாவட்டத்தில் இருந்து தேசிய ரீதியில் சாதனை-சில்பா ஜனாதிபதி விருது-
மன்னார் மூர்வீதி உப்புக்குளத்தை சேர்ந்த சிற்ப கைப்பணி ஆசிரியர் முகமட் ஆலாம் முகமட் சன்ஹர் அவர்கள் தேசிய அருங்கலைகள் பேரவையினால் நாடாத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்றமைக்கான விருது வழங்கும் நிகழ்வில் 28-05-2018 அன்று கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் BMICH வைத்து தேசிய ரீதியில் சிற்பி கைவினைப்பணியில் சில்பா ஜனாதிபதி விருது- 2017
- முதலாமிடம்-கடற்கரையும் வீடும் வெற்றிக்கிணணம் சான்றிதழ் 30000ரூபா பணப்பரிசும்
- இரண்டாமிடம் சோடி மயில் வெள்ளிப்பதக்கம் சான்றிதழ் 15000ரூபா பணப்பரிசும்
- மூன்றாமிடம் கௌதாரிப்பறவை வெண்கலப்பதக்கம் சான்றிதழ் 10000ரூபா பணப்பரிசும் ஒரேதடவையில் பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
- முதலாமிடம்-கடற்கரையும் வீடும் சான்றிதழ் 15000ரூபா பணப்பரிசும்
- இரண்டாமிடம் சோடி மயில் சான்றிதழ் 10000ரூபா பணப்பரிசும்
- மூன்றாமிடம் கௌதாரிப்பறவை சான்றிதழ் 5000ரூபா பணப்பரிசும் ஒரேதடவையில் பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அத்தோடு தனிநபர்பிரிவில் வடமாகாணத்திலும் தேசிய ரீதியிலும் முதல் மூன்று இடங்களைபெற்றுக்கொண்டது இதுவே முதல் தடவையாகும்
கலைஞர்களுக்கு உரிய மதிப்பும் பாராட்டும் குறைவாகத்தான் உள்ளது புரியவில்லை மன்னார் என்பதற்காகவா புரியவில்லை…..
மன்னாருக்கு பெருமைசேர்த்த முகமட் ஆலாம் முகமட் சன்ஹர் அவர்களை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
வை-கஜேந்திரன்]
மன்னார் மாவட்டத்தில் இருந்து தேசிய ரீதியில் சாதனை-சில்பா ஜனாதிபதி விருது-
Reviewed by Author
on
May 30, 2018
Rating:

No comments:
Post a Comment