நினைவேந்தலுக்கான குழுவொன்றை அமையுங்கள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக அனுஷ்டிக்கப்பட வேண்டிய நாள்.
வன்னிப் பெரு நிலப்பரப்பில் கொடும் போர் நடத்தி எங்கள் உறவுகளைச் சிங்களப் பேரினவாதம் கொன்றொழித்த கொடுமையை யார் மறந்தாலும் நாம் மறக்க மாட்டோம் என்பதை நினைவுபடுத்தும் நாள்.
இதற்கு மேலாக எங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகின்ற புனிதமான நாள்.
ஆம், உரிமையோடு வாழவேண்டும் என்று நினைத்ததற்காக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று எந்தப் பேதமும் பார்க்காமல் கொத்துக் கொத்தாக எங்கள் உறவுகளைக் கொன்றொழித்த கொடுமை நடந்ததை உலகத்துக்கு எடுத்துக் கூறுகின்ற நாளாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 அமைந்துள்ளது.
இலங்கை பெளத்த சிங்கள நாடு என்பதை நிரூபிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்து தமிழர் மனங்களை ரணமாக்கிய கொடுமை ஒன்றுபோதும் உலகத் தமிழினத்தை ஒற்றுமைப்படுத்த.
எனினும் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக் களை அடிக்கடி மறந்து போகின்றவர்களும் இழப்பின் வலியை உணர முடியாதவர்களும் நம் அரசியலில் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
இருந்தும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது சகல பேதங்களையும் கடந்து அனுஷ்டிக்கப்பட வேண்டிய நாள் என்பதில் எந்த மறுப்புக்கும் இடமில்லை.
அதேநேரம் ஒரே நாள், ஒரே நேரம் அனைவரும் ஒன்றுகூடி நினைவிடத்தில் நினைவேந்தல் செய்வதென்பது எங்கள் உறவுகளின் ஆத்ம சாந்திக்கு நிச்சயம் வழிவகுக்கும்.
எனவே ஒற்றுமையாக; ஒன்றுபட்டு முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிப்பது கட்டாயமானதாகும்.
அதேசமயம் எங்கள் உறவுகளை நினைவு கூருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவு மண்டபம் அமைப்பதும் பல்லாயிரக் கணக்கானவர்கள் அவ்விடத்தில் ஒன்றுகூடி நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்குமான ஏற் பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இதனை உடனடியாக செய்ய முடியவில்லை என்றாலும் அதற்கான திட்டமிடல்கள் விரிவான வகையில் தயாரிக்கப்படுவது அவசியமாகும்.
இவற்றையயல்லாம் எங்கள் தாயகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் மூலமாக திட்டமிடுவதற்கான குழுக்களை உருவாக்க வேண்டும்.
இத்தகைய பணிகளையும் நினைவேந் தலை ஒருமுகமாகவும் செய்வதற்கான ஒரு நிலையான அமைப்பை உருவாக்குவது எல் லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்.
அமைக்கப்படுகின்ற குழுவில், தமிழர் அரசு என்ற வகையில் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவர் சார்ந்த அவையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தாயகத்தின் நிபுணத்துவ தரப்பினர்,
புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அதன் விரிபரப்பு அமைவது நல்லது. இதுபற்றி அனை வரும் ஆராய வேண்டும்.
ஏனெனில் எந்த இட்டல் இடைஞ்சல் வந்தா லும் நினைவேந்தல் அனுஷ்டிப்பில் நினைவாலயம் அமைப்பதில் எந்த இடையூறும் ஏற்படக் கூடாது.
நினைவேந்தலுக்கான குழுவொன்றை அமையுங்கள்
Reviewed by Author
on
May 09, 2018
Rating:

No comments:
Post a Comment