அண்மைய செய்திகள்

recent
-

கரடி அருகே செல்பி எடுக்க முயற்சி பரிதாபமாக பலியாகியுள்ளார்.


இந்தியாவில் கரடியின் அருகே இருந்த படி டிரைவர் புகைப்படம் எடுக்க முற்பட்டதால், அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
ஓடிசாவின் கிழக்கு மாகாணத்தில் Prabhu Bhatara என்பவர் காரில் தனது உறவினர்களுடன் திருமணத்திற்கு சென்றுள்ளார். டிரைவரான இவர் காரில் சென்ற போது, சாலைக்கு அருகில் காட்டுப் பகுதியில் கரடி ஒன்று செல்வதை பார்த்துள்ளார்.

அந்த கரடி அடிபட்டு கிடந்துள்ளது. இதனால் கரடி அருகே சென்று ஒரு புகைப்படம்(செல்பி) எடுத்துவிடலாம் என்று எண்ணி தனது செல்போனை வைத்து புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பார்தவிதமாக கரடி அவரை தாக்கியுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் கரடியிடமிருந்து தப்பிப்பதற்கு போராடியுள்ளார்.
காரில் இருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக கரடியை விரட்டுவதற்கு குச்சி மற்றும் கல்கள் போன்றவைகளை பயன்படுத்தியுள்ளனர்.


ஆனால் கரடி விடாமல் அவரை தாக்கியுள்ளது. அச்சமடைந்த உறவினர்கள் அதன் பின் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அங்கு வருதற்குள் கரடி தாக்கியதால் Prabhu Bhatara பரிதாபமாக பலியாகியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அங்கிருந்த உறவினர்களில் சிலர் காப்பற்ற முடியாமல் போனதே என்று மனம் வருந்தியுள்ளனர்.



கரடி அருகே செல்பி எடுக்க முயற்சி பரிதாபமாக பலியாகியுள்ளார். Reviewed by Author on May 04, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.