இரண்டு கால்களை இழந்த முதியவர்: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை -
சீனாவைச் சேர்ந்த 70 வயது முதியவர் சியா போயு. மலையேற்று வீரரான இவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்தார்.
இந்நிலையில், சியா போயு தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி அதன் உச்சியை அடைந்துள்ளார். இதன்மூலம், இரண்டு கால்கள் இல்லாத நிலையில் உலகின் மிக உயரமான சிகரத்தை அடைந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதனை நேபாளத்தின் சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சியா போயுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இரண்டு கால்களை இழந்த முதியவர்: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை -
Reviewed by Author
on
May 16, 2018
Rating:
No comments:
Post a Comment