நீண்ட நேரம் நாற்காலியில் உட்காருவதால் ஏற்படும் ஆபத்துகள்? -
நினைவாற்றல் இழப்பு, வெற்று எண்ணம், கவனக்குறைபாடு, தன்னைச் சுற்றி நடப்பதை உள்வாங்காமல் இருப்பது, தனிமை, மனஅழுத்தம், மனச் சோர்வு போன்றவை ஏற்படும்.
- நீண்ட நேரம் ஏ.சி-க்கு அடியில் நாற்காலியில் அமர்ந்தபடியே வேலை பார்ப்பதால், சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போகும். வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து போன்றவை நம் உடலுக்குக் கிடைக்காது.
- நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் நம்முடைய ஆக்டிவிட்டி லெவல் குறையும்.
- உடல் சோம்பலடையும். நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் முதுகுவலி ஏற்படும் என்று சொல்வார்கள். உண்மையில், இடுப்புவலிதான் ஏற்படும்.
- உட்கார்ந்திருக்கும்போது நம் உடல் எடை இடுப்புத் தசைகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த அழுத்தத்தால், முதுகுத்தண்டு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளில் வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படும். சிலருக்கு சிறுநீரகக் கல்லை உண்டாக்கும்.
- நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் சில உறுப்புகளின் செயல்பாடு உடலுக்குத் தேவைப்படாமல் போய்விடும்.இப்படி அந்த உறுப்புகள் தொடர்ந்து செயல்படாமலிருந்தால் காலப்போக்கில் அவற்றின் செயல்திறன் குறைந்துவிடும். கால், வயிறு மற்றும் தசைகளில் செயல்கள் நடைபெறாமல் நின்று போகும். நாளாக, ஆக பல நோய்கள் ஏற்பட இதுவும் காரணமாகிவிடும்.
- நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருந்தால், கால்களிலேயே ரத்தம் தங்கிவிடும். இந்த ரத்தம், கால்களில் உள்ள தசைகளின் இயக்கத்தால் அழுத்தம் பெற்று, இதயத்தை நோக்கிச் செலுத்தப்படும். ரத்த ஓட்டம் தேங்கி இருப்பதால், மூளைக்கும் இதயத்துக்கும் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். இதனால், கால், மூளை, இதயம் போன்ற பகுதிகளில் உள்ள ரத்தக்குழாய்களில் கட்டிகள் உண்டாக வாய்ப்பு உண்டு.
நீண்ட நேரம் நாற்காலியில் உட்காருவதால் ஏற்படும் ஆபத்துகள்? -
Reviewed by Author
on
May 17, 2018
Rating:
Reviewed by Author
on
May 17, 2018
Rating:


No comments:
Post a Comment