சுவிஸ்லாந்தில் மேதின ஊர்வலம் - ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் பங்கேற்பு
பிரபாகரனின் உருவப்படம் மற்றும் புலிக் கொடிகளை ஏந்தியவாறு சுவிஸ்லாந்தில் மேதின பேரணி இடம்பெற்றுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் தமது உரிமைகளை வலியுறுத்தி பேர ணிகளை நடத்தியுள்ளனர்.இதற்கமைய சுவிஸ்லாந்தின் சூரிச் நக ரில் புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட மே தின ஊர்வலம் அனைவரதும் கவன த்தை ஈர்த்திருந்தது.
சுவிஸ்லாந்தின் சூரிச்மாநிலத்திலுள்ள ஹெல்விட்ஷியா பிளாட்ஸ் என்னும் இடத் தில் இருந்து பிரதான புகையிரதவழியாக பல்லின மக்களுடன் ஈழத்தமிழர்களும் தமது உரிமைகளுக்காக தொழிலாளர் தினபேர ணியொன்றை நடத்தினர்.
இந்தப் பேரணி சூரிச்பாராளுமன்றம் வரை சென்றடைந்தது. சுவிஸில் இருக்கும் தொழிலாளர் சங்கம் முன்செல்ல பலஅரசியல் கட்சிகளும் அவர்களைத் தொடர்ந்து சென்றன.
இதற்கமைய புலம்பெயர் தமிழர்கள் சார் பில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின் திருவுருவப்படத்தையும் முன்வைத்து பேரணியில் கலந்துகொண்ட னர்.
அதேவேளை தமிழினத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இன அழிப்பை பறைசாற் றும் நிழல் படங்கள் தாங்கிய பதாகைகளையும்பேரணியில் சென்றோர் ஏந்திச் சென்றனர்.
ஏனைய நாட்டு மக்களும் தங்களது நாட் டுக்கொடியுடன் கோசங்கள் இட்டு பேரணியாக சென்றதுடன், தொழிலாளருக்கு ஆதரவாக பல கோசங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பல்வேறு நாடுகளைச்சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்த இந்தப் பேரணியில் தமிழ் மக்கள் இலங்கையிலே நடந்த இன அழிப்பு துண்டு பிரசுரங்களையும் பேரணியில் கலந்துகொண்ட மக்களுக்கு விநியோகித்ததை காணமுடிந்தது.
சுவிஸ்லாந்தில் மேதின ஊர்வலம் - ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் பங்கேற்பு
Reviewed by Author
on
May 04, 2018
Rating:

No comments:
Post a Comment