தலைமன்னாரில் அமைக்கப்பட்ட புதிய பாலம் திறந்து வைப்பு -
வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரீமூஸ் சிறாய்வாவினால் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட, தலைமன்னார் கிராமத்திற்கான பிரதான பாலம் நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசசபை உறுப்பினர் ராஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது, வட மாகாண சபையினால் அமுல்படுத்தப்பட்ட கிராமிய பாலத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுமார் 22 மீற்றர் கொண்ட குறித்த பாலம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் வடக்கில் 87 கிராமிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் 16 பாலங்களும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட பாலமே வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களின் போக்குவரத்திற்காக விடப்பட்டுள்ளது.
இதன்போது நிகழ்வில் அருட்தந்தை நவரெட்ணம் அடிகளார், வட மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகிர் மற்றும் மன்னார் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னாரில் அமைக்கப்பட்ட புதிய பாலம் திறந்து வைப்பு -
Reviewed by Author
on
May 28, 2018
Rating:
Reviewed by Author
on
May 28, 2018
Rating:


No comments:
Post a Comment