மும்பை போலீஸையே திணறவைத்த விஜய் ரசிகர்கள்
விஜய் நடித்த படங்களில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வெளியான படம் தலைவா. ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான இப்படம் பல ரசிகர்களுக்கு பேவரெட்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என்று ரசிகர்கள் தன்னிடம் அதிகம் கேட்டபதாக இயக்குனர் விஜய் அண்மையில் கூறியிருந்தார். மற்றொரு பேட்டியில் இயக்குனர் பேசும்போது, தாராவியில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று விஜய் அவர்களிடம் கேட்டோம். அவரும் சரி என்று கூறி வந்தார். அங்கு ஒரு மேம்பாலத்தில் படப்பிடிப்பு எடுக்கலாம் என்று பார்த்தால் ஒரு 20 ஆயிரம் ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர்.
ரசிகர்கள் கூட்டத்தை பார்த்த மும்பை போலீஸ் எங்களிடம் வந்து தயவுசெய்து விஜய் அவர்களை வெளியில் வந்து கை அசைத்துவிட்டு செல்ல சொல்லுங்கள், மேம்பாலம் இவ்வளவு கூட்டத்தை தாங்காது என்றார்.
நானும் இதனை விஜய் அவர்களிடம் சொல்ல அவரும் ரசிகர்களை சந்தித்தார். அப்போது கூட ஒரு காட்சியை நாங்கள் அப்படியே பதிவு செய்தோம், தலைவா பாடலில் பார்த்தால் தெரியும் என்றார்.
மும்பை போலீஸையே திணறவைத்த விஜய் ரசிகர்கள்
Reviewed by Author
on
May 04, 2018
Rating:

No comments:
Post a Comment