அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம்பெற்றது 03நாள் கருத்தரங்கு...2018ம் ஆண்டு க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களுக்கு



மன்னார் மாவட்ட பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ மாணவர்களின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் நிதியுதவியுடனும்,  நியூ மன்னார் இணையத்தின் ஊடக அனுசரணையுடனும் 2018 ம் ஆண்டு க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களுக்கு கணக்கியல், வணிகக்கல்வி, பொருளியல் பாடங்களுக்கான இலவச கருத்தரங்கு 2018 மே மாதம் 28, 29, 30ஆம் திகதிகளில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்ப நாளில் ( மே-28) இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சுகந்தி செபஸ்டியன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வன்னி  பாராளுமன்ற உறுப்பினர் இ. சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்களும், அதிதியாக மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் சகோதரர் S.E.ரெஜினோல்ட்( மணி) அவர்களும், அன்றய நாளின் கணக்கியல் படத்திற்கான வளவாளர் S. சபேசன் (அரச கணக்காய்வாளர்- கொழும்பு) அவர்களும், பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டுக்குழு தலைவர் J.சஞ்சீவன் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டனர்.

மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் இடம்பெற்ற இம் மூன்று நாள் கருத்தரங்கில் மிக பிரபல்யமான ஆசிரியர்கள் வளவாளராக கலந்துகொண்டதுடன் மாவட்டத்தின் 90% இற்கு அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

மேலும் கருத்தரங்கின் முடிவில் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட பிண்ணூட்டலானது மிகக் சிறப்பாக அமைந்ததுடன் தொடர்ச்சியாக இவ்வாறான திறமையான ஆசிரியர்களை வளவாளராக கொண்டு இத்தகைய கருத்தரங்கினை தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் நடாத்த வேண்டுமென பல்கலைக்கழக மாணவர்களை கேட்டுக்கொண்டனர் மேலும் கணக்கியல், வணிகக்கல்வி பாடங்களில் பகுதி 2 வினாத்தாளை அத்தகைய ஆசிரியர்களை கொண்டு மேலும் 2 நாட்கள் கருத்தரங்கினை நடத்தவேண்டும் என மாணவர்களால் கோரிக்கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது









சிறப்பாக இடம்பெற்றது 03நாள் கருத்தரங்கு...2018ம் ஆண்டு க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களுக்கு Reviewed by Author on June 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.