215 அகதிகள் இரண்டு நாட்களில் சடலமாக மீட்பு -
சட்டவிரோதமான முறையில், கடல் வழியாக ஐரோப்பா நோக்கி பயணித்த அகதிகள் 215 பேரின் சடலங்கள் கடந்த இரண்டு நாட்களில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை 100 பயணிகளுடன் பயணித்து கொண்டிருந்த படகு மூழ்கியதில் 95 பேர் லிபிய தலைநகர் த்ரிப்போலி பிரதேச கடலில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதில் உயிர் தப்பிய ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த தினத்தில் 130அகதிகளை ஏற்றிச்சென்ற மற்றும் ஒரு படகு விபத்துக்குள்ளானதில் 70 பேர் நீரில் மூழ்கி மரணித்துள்ளனர்.
கடலில் இருந்து 60பேர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கராபுல்லி என்ற கடற் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடற்படையினர் 50 சடலங்களை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
215 அகதிகள் இரண்டு நாட்களில் சடலமாக மீட்பு -
Reviewed by Author
on
June 23, 2018
Rating:

No comments:
Post a Comment