ஜேர்மனியில் சக ஊழியர்கள் 21 பேரை கொலை செய்த நபர்: அதிர்ச்சி
குறித்த நபர் தொடர்பில் கண்காணிப்பு கமெராவில் பதிந்த காட்சிகள் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியின் Schloss Holte-Stukenbrock நகரில் அமைந்துள்ள ஒரு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 56 வயது நபர் தமது சக ஊழியர்களை திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பெயர், அவர் பணி புரிந்த நிறுவனத்தின் பெயர் அல்லது பலியான நபர்களின் பெயர் என் எதையும் பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் பணி புரியும் நபர் ஒருவர் தமது உணவில் சந்தேகத்துக்குரிய வகையில் ஏதோ கலந்திருப்பதாக நிர்வாகத்தினரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவே, பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கண்காணிப்பு கமெராவில் அந்த காட்சி பதிவாகியிருந்தது.
குரித்த நபரின் உணவில் கைதான நபர் தூள் போன்ற ஒரு பொருளை உணவின் மீது தூவுகின்றார்.
இதனையடுத்து உணவை பரிசோதனையிட்ட அதிகாரிகள் அதில் விஷம் கலந்திருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் கைதான நபரது குடியிருப்பில் இருந்து ரசாயன பொருட்களை பொலிசார் கைப்பற்றினர்.
மட்டுமின்றி நீண்ட 18 ஆண்டுகளாக குறித்த நபர் உணவில் விஷம் கலந்து தமது சக ஊழியர்கள் 21 பேரை கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.
பெரும்பாலானோர் புற்றுநோய் அல்லது மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் மரணமடைந்துள்ளனர்.
உணவில் இவர் கலந்துள்ள ரசாயன பொருட்களின் தாக்கமே இந்த இறப்புக்கெல்லாம் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் இந்த கொலைகளுக்கான நோக்கம் என்ன என்பது தொடர்பில் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜேர்மனியில் சக ஊழியர்கள் 21 பேரை கொலை செய்த நபர்: அதிர்ச்சி
Reviewed by Author
on
June 28, 2018
Rating:

No comments:
Post a Comment