இராணுவத்தை ஒன்பது துண்டுகளாக பிரிக்குமாறு விக்னேஸ்வரன் கோரினார்! சிங்கள ஊடகம் |
இலங்கை இராணுவத்தை ஒன்பது துண்டுகளாக பிரிக்குமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கோரினார் என வார இறுதி சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பாதுகாப்புப் படையை ஒன்பது துண்டுகளாக பிரித்து ஒன்பது மாகாணங்களினதும் பகுதிகளாக நிறுவுமாறு விக்னேஸ்வரன் அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை அமுல்படுத்தினால் ஒவ்வொரு மாகாணசபைக்கும் ஒர் இராணுவ அலகு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அரச நிறுவனமொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வில் அண்மையில் பங்கேற்ற போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இராணவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதனை தமிழ் மக்கள் அனுமதிக்கவில்லை எனவும், மாகாணங்களுக்கு இராணுவத்தினரை அனுப்பி வைப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கின் எந்தவொரு காணியையும் அரசாங்கத்தின் அனுமதியின்றி பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப் போவதில்லை என கூறியுள்ள விக்னேஸ்வரன், அது தொடர்பிலான தீர்மானமொன்றையும் வட மாகாணசபையில் நிறைவேற்றியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் வட மாகாண முதலமைச்சர் செயற்பட்டு வருவதாக சிங்கள ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்தை ஒன்பது துண்டுகளாக பிரிக்குமாறு விக்னேஸ்வரன் கோரினார்! சிங்கள ஊடகம் |
Reviewed by Author
on
June 11, 2018
Rating:

No comments:
Post a Comment