கோடிக்கணக்கில் விற்பனையாகும் மனித உடல் உறுப்புகள்: அம்பலமான அதிர்ச்சி தகவல் -
உடல் உறுப்புகளின் தேவையைப் பொறுத்து சர்வதேச சந்தையில் அதன் விலைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.
இதற்காக மாபியா கும்பல் செயல்படுகிறது, பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள்தான் மாபியாக்களின் முதல் சாய்ஸ்.
சர்வதேச கள்ளச்சந்தையில் ஒரு நுரையீரலின் விலை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய், சிறுநீரகம் பத்து லட்சம் முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கல்லீரலின் விலை 90 லட்சம் ரூபாய், இதயத்தின் விலை 80 லட்சம் ரூபாய், ஒரு ஜோடி கண்களின் விலை 15 லட்சம் ரூபாய், எலும்பு மஜ்ஜை ஒரு கிராம் 15 லட்சம் ரூபாய், கருமுட்டை 8 லட்சம் ரூபாய்.
எலும்புக்கூடு 5 லட்சம் ரூபாய்க்கும், சிறு எலும்புகள் மற்றும் தசைநார்கள் 4 லட்சம் ரூபாய்க்கும், ஒரு லிட்டர் ரத்தம் 44 ஆயிரம் ரூபாய்க்கும், தோல் ஒரு சதுர சென்டிமீட்டர் 90 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
ஆனால் இந்தத் தொகை உறுப்பை தானம் கொடுப்பவருக்கு கிடைப்பதில்லை. உறுப்புக்கு உரியவருக்கு சொற்ப தொகையை கொடுத்துவிட்டு கொள்ளை லாபம் பார்ப்பது மருத்துவ மாபியாக்கள்தான்.
உறுப்புகளுக்காக மனிதர்களை கடத்திக் கொலை செய்யும் கொடூரங்களும் அரங்கேறுகின்றன, மருத்துவமனைகளில் எளியவர்களின் உறுப்புகள் எளிதாக திருடப்படுகின்றன.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, பிரேசில் போன்ற நாடுகள் உடல் உறுப்புகள் விற்பனையில் முன்னணியில் உள்ளன.
உடல் உறுப்புகளை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் வாங்குகின்றன.
கோடிக்கணக்கில் விற்பனையாகும் மனித உடல் உறுப்புகள்: அம்பலமான அதிர்ச்சி தகவல் -
Reviewed by Author
on
June 21, 2018
Rating:
Reviewed by Author
on
June 21, 2018
Rating:


No comments:
Post a Comment