அண்மைய செய்திகள்

recent
-

டெனிஸ்வரன் வழக்கு ! நீதி மன்ற தீர்ப்பு சொல்லும் முக்கிய செய்தி என்ன...

டெனிஸ்வரன் வழக்கு ! நீதி மன்ற தீர்ப்பு சொல்லும் முக்கிய செய்தி என்ன...ஊழல் அமைச்சரை கூட நீக்க அதிகாரம் இல்லையா வடமாகாண முதல்வருக்கு! 
வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை, முதல்வர் விக்னேஸ்வரன் பதவி நீக்கியது செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது .குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். ( இதுதான் செய்தியின் சாராம்சம் ). 

ஆனால்   இவ் தீர்ப்பை வைத்து திரு டெனிஸ்  ஆதரவாளர்கள் வாழ்த்து சொல்வதும். திரு விக்கி எதிர்ப்பாளர்கள் தமது பாணியில் பதவி விலக சொல்வதிலும் மட்டுமே குறியாக உள்ளனர்.  இருவரும் இந்த தீர்ப்பு சொல்லும் முக்கிய விடயத்தை கவனிக்காமல் கருத்து சொல்வதை ஏற்க முடியவில்லை ,,

இந்த தீர்ப்பு ஒரு வடமாகாண முதல்வருக்கு (தற்பொழுது விக்கி நாளை யாரோ ) இருக்கு அதிகாரம் தொடர்பானது , ஒரு உழல் வாதியை தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நீக்க முடியாது என்று நீதி மற்றம் கூறுகின்றது ,, எல்லா அதிகாரமும் ஆளுநருக்கு தான் இருக்கு என்று சொன்னால் எதற்கு வடமாகாண சபை ?எதற்கு முதல்வர் ?  மத்திய அரசு சொல்வதை செய்யும் ஆளுநரே அமைச்சர்களை நியமித்து ஆட்சி நடத்திட்டு போகலாமே!

வடமாகாண சபை தேர்தல் காலத்தில் திரு விக்னேஸ்வரனை முன்னுறுத்தி பரப்புரை செய்யும் போது கூட்டமைப்பு தலைவர்கள் சொன்னது விக்கி முதல்வர் ஆனால் காணி அதிகாரம் காவல்துறை அதிகாரம் எல்லாம் நீதிமன்ற ஊடக பெற்று விடுவோம் என்று .. அவ் வாக்குறுதி எல்லாம் தேர்தல் காலத்தில் மட்டுமே ..  இன்று விக்கி அதிகாரம் இல்லை என்று எள்ளி நகையாடுபவர்கள் ,  அவருக்கு ஆக மட்டுமே யோசிக்கிறார்கள் ,அவர்களுக்கு வடமாகாண சபையின் அதிகாரம் தொடர்பாக ஏதும் கவலை இல்லை  . இன்று விக்னேஸ்வரனுக்கு நாளை இன்னொருவருக்கு :

டெனிஸ் வரனுக்கு வாழ்த்த்து சொல்பவர்களுக்கு   , நீதி மன்ற தீர்ப்பினால் ஊழல் வாதி நேர்மையானவர் ஆகிவிட்டாரா?  விக்னேஸ்வரனின் மிகப்பெரிய தவறே ஊழல் அரசியல் வாதிகளை தகுந்த ஆதாரங்கள் இருந்து கூட அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டாமைதான் ,, பதிவியை விலக்கியது மட்டுமே தட்டனை ஆகாது !எதிர்காலத்தில் ஊழல் அரசியல் வாதிகள் அனைவரும் அரசியல் அரங்கில் இருந்து அகற்றப்பட வேண்டும்

-முத்து விஜிதன்-  

டெனிஸ்வரன் வழக்கு ! நீதி மன்ற தீர்ப்பு சொல்லும் முக்கிய செய்தி என்ன... Reviewed by Author on June 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.