மைக்ரேன் தலைவலி ஏன் ஏற்படுகின்றது தெரியுமா? -
திடீரென தட்பவெட்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சிலருக்கு மைக்ரேன் பாதிப்பு ஏற்படுகின்றது.
பொதுவாக அதிக பளீர் வெளிச்சம், தூக்கமின்மை, காபி, கேபின், சாக்லெட் இவையெல்லாம் மைக்ரேன் தலைவலியினை தூண்டிவிடும் என்பது பலரின் அனுபவம் ஆகும்.
மைக்ரேன் தலைவலியை தவிர்க்கும் வழிமுறைகள்
தூக்கமின்மை மைக்ரேன் தலைவலியினைத் தூண்டும், குறைந்தது அன்றாடம் 8 மணிநேர தூக்கம் என்பது அவசியம். முறையான குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க சென்று குறைவான குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவதும் மைக்ரேன் தலைவலியினைத் தவிர்க்க மிக அவசியம்.தூங்கச் செல்வதற்கு முன்கூட அல்லது படுத்துக்கொண்டே தூங்கும் வரை நீல ஒளி உபயோகிப்பவருக்கு மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இதனை முற்றிலும் தவிர்ப்பதனால் மைக்ரேன் தலைவலியை தவிர்க்கலாம்.
சிலருக்கு சில வகை சோபாக்கள், உடைகள், போர்வைகள் அதிலுள்ள டிசைன்கள், வரிகள், வட்டங்கள் போன்றவை மூளையிலுள்ள கார்டெக்ஸ் பகுதியினைக் தூண்டி மைக்ரேன் வலியினை உருவாக்குகின்றன, இதற்கு எளிமையான டிசைன் கொண்ட உடைகள், சோபாக்கள், படுக்கை விரிப்புகளை உபயோகிப்பது நல்லது.
வெயிற்காலங்களில் அதிகளவு தண்ணீர் குடிப்பதாலும் மைக்ரேன் தலைவலியை தவிர்க்கலாம்.
மைக்ரேன் தலைவலி ஏன் ஏற்படுகின்றது தெரியுமா? -
Reviewed by Author
on
June 03, 2018
Rating:

No comments:
Post a Comment