அண்மைய செய்திகள்

recent
-

சி.வசீகரன் படைத்த 'புளியம்பூ' கவிதைநூல் வெளியீட்டு விழா


சுவிட்சர்லாந்து தேசத்தில் வசிக்கும் ஈழத்தின் யாழ்ப்பாணம் அல்வாயினைச் சேர்ந்த சி.வசீகரன் அவர்கள் ஏற்கனவே 'பூவரசம் தொட்டில்' கவிநூலினை வெளியீடு செய்தவர். நூலாசிரியரின் இரண்டாவது நூலாக்கமாக வெளியாகும் 'புளியம்பூ' கவிதை நூலானது 02.06.2018 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஈழத்தின், யாழ்ப்பாணம் மாவட்டம் அல்வாய் வடக்கில் அமையப்பெற்றுள்ள நக்கீரன் கலையரங்கு வளாகத்தில் ஆரம்பமானது. வள்ளுவர்புரம் 'செல்லமுத்து வெளியிட்டகம்' வெளியீடாக வெளிவரும் இந்நூலின் வெளியீட்டு நிகழ்வுக்கு ஓய்வுநிலை அதிபரும், சமாதான நீதவானுமாகிய கி.கணேசன் அவர்கள் தலைமை வகித்தார். பிரதம விருந்தினராக‌ மேற்கு ஆபிரிக்காவிற்கான ஐக்கிய நாடுகளின் முகாமைத்துவ நிபுணர் விஜயகுமார் நவனீதன் பங்கேற்றார். ரியூப்தமிழ் வலையமைப்பு ஊடக அனுசரணை வழங்கியிருந்தது..

முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து சுடரேற்றல் இடம்பெற்றது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து மாணவிகள் தமிழ்மொழி வாழ்த்து இசைத்தனர். வரவேற்புரையினை யாழ்.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் செ.மிகுந்தன் நிகழ்த்தினார். ஆசியுரையினை இராஜநாயகம் ஆசிரியர் வழங்கினார்.

முதலுரையினை டான் தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பணிப்பாளர் 'பண்பலை வேந்தன்' ரி.எஸ்.முகுந்தன் ஆற்றினார். வாழ்த்துரைகளை மக்கள் வங்கியின் ஓய்வுநிலை முகாமையாளர் க.சின்னராசா, கலாபூஷணம் மா.அனந்தராசன், மக்கள் வங்கியின் ஓய்வுநிலை முகாமையாளர் படைப்பாளர் கொற்றை பி.கிருஸ்ணானந்தன், யாழ்ப்பாணம் சின்னத்தம்பி மகா வித்தியாலய அதிபர் ச.செல்வானந்தன் ஆகியோர் வழங்கினர்.

இளைய படைப்பாளிகள் சார்பாக கவிஞர் வேலணையூர் ரஜிந்தன் 'இளைய படைப்பாளர்' உரை நிகழ்த்தினார்.

புலம்பெயர் உறவுகள் சார்பில் கனடா படைப்பாளிகள் உலகம் நிறுவுநர் ஐங்கரன் கதிர்காமநாதன் கருத்துரை அளித்தார். நூலின் அறிமுகவுரையினை கனடா தேசத்துப் பெண் படைப்பாளி மணிமேகலை கைலைவாசன் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டினை யோ.புரட்சி தொகுத்தளிக்க, நூலினை நிகழ்வின் பிரதம விருந்தினர் மேற்கு ஆபிரிக்காவிற்கான ஐக்கிய நாடுகளின் முகாமைத்துவ நிபுணர் விஜயகுமார் நவனீதன் வெளியீடு செய்தார். 'படைப்பாளருக்காய் பத்தாயிரம்' எனும் திட்டத்திற்கமைவாக முதற்பிரதியினை கிருபா லேண்ர்ஸ் அதிபரும், தொழிலதிபருமாகிய 'சமூக திலகம்' அ.கிருபாகரன் அவர்கள் பெற்று ஊக்குவித்தார். தொடர்ந்து நூலின் பிரதிகள் யாவருக்கும் வழங்கப்பட்டன.

நூலின் ஆய்வுரையினை எழுத்தாளரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தருமாகிய தர்மினி ரஜீபன் நிகழ்த்தினார். தொடர்ந்து பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றது. வவுனியா தமிழ் விருட்சம் தொண்டமைப்பின் சார்பாக சந்திரகுமார் கண்ணன் அவர்கள் நூலாசிரியருக்கு நினைவுப் பரிசில் வழங்கி கெளரவித்தார்.

வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். நிகழ்வின் இறுதியாக 'புளியம்பூ' நூலின் ஆசிரியர் சி.வசீகரன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். சி.வசீகரன் அவர்களினால் வெளியிடப்பட்ட‌ 'பூவரசம் தொட்டில்' மற்றும் 'புளியம்பூ' ஆகிய கவிதை நூல்கள் சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து தேசங்களில் அறிமுக விழா காணவுள்ளன. தகுதிநிறை படைப்பாளிகளை, கல்விமான்களைத் தந்த அல்வாய் மண்ணில் இடம்பெற்ற 'புளியம்பூ' கவிநூல் வெளியீட்டு விழாவில்  உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
 









சி.வசீகரன் படைத்த 'புளியம்பூ' கவிதைநூல் வெளியீட்டு விழா Reviewed by Author on June 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.