சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை சந்தித்த நோர்வே இராஜாங்க அமைச்சர்
நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
போருக்குப் பின்னர் நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
அத்துடன் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் செயற்திட்டத்தை குருநகரில் ஆரம்பித்து வைத்ததுடன், பளையில் காய்கறி, பழங்கள் பொதியிடும் மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்நிலையில் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு உறுப்பினர்களையும் சந்தித்து சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இச்சந்திப்பில், இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை சந்தித்த நோர்வே இராஜாங்க அமைச்சர்
Reviewed by Author
on
June 24, 2018
Rating:

No comments:
Post a Comment