சூர்யாவிடம் அதை எதிர்பார்த்தால் அடி தான் கிடைக்கும்: கார்த்தி
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய கார்த்தி படத்தில் நடித்த அனுபவம் மட்டுமின்றி சூர்யா பற்றியும் பேசினார்.
பட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும்.
நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி.
சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும் என்றார் கார்த்தி.
சூர்யாவிடம் அதை எதிர்பார்த்தால் அடி தான் கிடைக்கும்: கார்த்தி
Reviewed by Author
on
June 12, 2018
Rating:

No comments:
Post a Comment