சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை!
கடந்த செவ்வாய்க்கிழமை சிறையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து ஆபத்தான நிலையில், பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடுமையான காயம் காரணமாக பெண் இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக அரச சட்டத்தரணி அறிவித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த 29 வயதான இந்த பெண், சுவிஸர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பத்திருந்த விண்ணப்பம் கடந்த ஆண்டு மே மாதம் நிராகரிக்கப்பட்டது.
டப்ளின் நடைமுறைப்படி மோல்டா இந்த பெண் குறித்து பொறுப்புக் கூற வேண்டும்.
இதனையடுத்து தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் சனிக்கிழமை பேர்ண் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் கடந்த திங்கட்கிழமை பசல் பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார்.
சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை!
Reviewed by Author
on
June 15, 2018
Rating:

No comments:
Post a Comment