வெள்ளாங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திடீர் விஜயம்-
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் இன்று வெள்ளிக்கிழமை(29) மதியம திடீர் விஜயம் மேற்கொண்டர்.
வெள்ளாங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும்,குறிப்பாக கடந்த சில தினங்களாக உரிய வைத்தியர் கடமையில் இருப்பதில்லை எனவும் மக்கள் வடமாகாண சுகாதார அமைச்சரிடம் முறையிட்டிருந்தனர்.
-இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை(29) மதியம் வடக்கு சுகாதார அமைச்சர் வெள்ளாங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு திடீர் விஜயம் செய்து நிலமைகளை அவதானித்தார்.
குறித்த பராமரிப்பு நிலையத்தில் கடமையில் இருக்க வேண்டிய வைத்தியர் கடமையில் இல்லாமை குறித்து விசாரனைகளை மேற்கொண்டதோடு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும் குறித்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் தொடர்பாக கடமையாற்றுகின்ற பணியாளர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு,உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளாங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திடீர் விஜயம்-
Reviewed by Author
on
June 30, 2018
Rating:
No comments:
Post a Comment