அண்மைய செய்திகள்

recent
-

விச ஊசி ஏற்றப்பட்டதால் முன்னாள் போராளி ஒருவர் மரணம்..?


முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழை இலை வெட்டுவதற்காக வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச்சென்றபோது தண்ணீர்த் தொட்டியில் மயங்கியநிலையில் காணப்பட்டார்.
இதனையடுத்து, உடனே சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த இளைஞர், 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் படையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தடுப்பு ஊசி என கூறி 3 ஊசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 120 பேர் புற்றுநோய், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், குறித்த முன்னாள் போராளியும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விச ஊசி ஏற்றப்பட்டதால் முன்னாள் போராளி ஒருவர் மரணம்..? Reviewed by Author on July 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.