மன்னாரில் அரச,தனியார் பேரூந்து தரிப்பிடம் மறு சீரமைப்பிற்காக உடைப்பு -மக்கள் வீதிகளில் அவதி-படம்
மன்னார் நகரில் அரச தனியார் பேரூந்து தரிப்பிடங்களை ஒன்றிணைத்து புதிதாக அமைக்கப்படவுள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் தற்போது ஒரே நேரத்தில் குறித்த இரு பேரூந்து தரிப்பிடங்களும் உடைக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் அரச மற்றும் தனியார் பேரூந்து தரிப்பிடங்கள் நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக இலங்கை நகர அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் புதிய பேரூந்து தரிப்பிடம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் அரச மற்றும் தனியார் பேரூந்து தரிப்பிடம் மற்றும் அங்கு காணப்பட்ட பயணிகள் தரிப்பிடம் போன்றவற்றிற்கான கட்டிடங்கள் மன்னார் நகர சபையினால் முழுமையாக உடைக்கப்பட்டுள்ளது.
இதனால் போக்கு வரத்திற்காக வருகை தரும் ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள்,கர்ப்பிணிகள், வயோதிபர்கள் என அனைவரும் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரிங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக பயணங்களை மேற்கொள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கு வரும் மக்கள் வீதிகளிலும்,கடும் வெயிளிலும், தூசிகளுக்கு மத்தியிலும் நின்று பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
-மன்னார் நகரில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவை போன்றவற்றை ஒன்றிணைத்து குறித்த பேரூந்து தரிப்பிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும்,தற்காலிகமாக பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் நகர சபை இதுவரை எவ்வித ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
-எனவே குறித்த வேலைத்திட்டம் முடிவடையும் வரை மக்களும் பயணிகளும் வீதியில் நிற்க முடியாது.
எனவே மன்னார் நகர சபையின் தலைவர்,உப தலைவர்,உறுப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
July 11, 2018
Rating:

No comments:
Post a Comment