வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு: வெளியான புள்ளிவிபரங்கள் -
வடக்கு, கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பின் ஆதிக்கம் எவ்வகையில் உள்ளது என்பது தொடர்பான தகவல் பிரித்தானிய தமிழர் பேரவையால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த புள்ளிவிபரங்களின் படி வடக்கில், கடற்படை முகாம்கள் 93, இராணுவ முகாம்கள் 54, வான் படை முகாம் 1, பொலிஸ் முகாம்கள் 30 என மொத்தம் 178 முகாம்கள் வடக்கில் நிலைகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வடக்கு கிழக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இரகசியத் தடுப்பு முகாம்களின் எண்ணிக்கைகள் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரவிக்கப்படுகின்றது.
1025 சதுர கிலோமீட்டருள்ள யாழ். மாவட்டத்தில் குறைந்தது 4,507 ஏக்கர் அளவிலான தனியார் காணிகளை அரச படையினர் ஆக்கிரமித்துள்ளனர் எனவும் இதனால் 9,564 குடும்பங்களைச் சேர்ந்த 33,286 தமிழ் மக்கள் மீளக் குடியேறுவதும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான நிலம், நீர், கடல்பரப்பினை பயன்பாட்டிற்கு உட்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல தடவைகள் கொடுத்திருந்த உறுதிமொழிகளை மீறி வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தை குறைக்காமல் போர் முடிவடைந்து 10 வருடங்களின் பின்னரும் தனியார் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்குள் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள தனியார் நிலங்களை மீளக் கையளிப்பேன் என்று தேர்தல் வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பு: வெளியான புள்ளிவிபரங்கள் -
Reviewed by Author
on
July 24, 2018
Rating:

No comments:
Post a Comment