ஈழத்தின் பூநகரியில் நிறைவேறிய 'பூமியில் ஒரு புதையல் பூநகரி' -
ஈழத்தின் பூநகரியில் நிறைவேறிய 'பூமியில் ஒரு புதையல் பூநகரி' தகவலாய்வு நூலின் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் இடம்பெறி்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பேர்ண் வள்ளுவன் பாடசாலை இயக்குநர் பொன்னம்பலம் முருகவேள் எழுதி, வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிட்டுள்ள 'பூமியில் ஒரு புதையல் பூநகரி' தகவலாய்வு நூலின் வெளியீடு செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சுவிட்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவர்கள் அருளினி முருகவேள், முருகவேள் அம்பலன் ஆகியோர் திருக்குறள் ஓதினர்.
நிகழ்வில், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி கலந்து கொண்டுள்ளதுடன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை இறுதியாண்டு மாணவன் சிறீகந்தராசா சிவகந்தசிறீ தொகுத்தளித்தார்.
மேலும், “பூமியில் ஒரு புதையல் பூநகரி” தகவல் ஆய்வு நூலானது, பூநகரி எவ்விதம் தொன்மைக் காலத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது என்பதை சான்றுகளுடன் நிரூபிக்கும் ஒரு நூல் என்பதோடு, தற்காலத் தகவல்கள், தமிழ், தமிழர் சார்ந்த புராதன தகவல்கள் கொண்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தின் பூநகரியில் நிறைவேறிய 'பூமியில் ஒரு புதையல் பூநகரி' -
Reviewed by Author
on
July 31, 2018
Rating:

No comments:
Post a Comment