மூச்சும், பேச்சும்
ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து மூச்சு ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும்.
மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும். வலது நாசி சூரியக் கலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர்.
பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரிய கலையில் ஓடும். ஆதிக வெயில் அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும். ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும். இதில் எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும்.
ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும். ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும்.
நாம் நடக்கும் போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம் நடைபெறுகிறது.
சுவாசம் 11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும். 10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும். 9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான். 8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான். 7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான். 6 அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான். 5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும். 4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும். 3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும். 2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும். 1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்.
மூச்சும், பேச்சும்
Reviewed by Author
on
July 23, 2018
Rating:
Reviewed by Author
on
July 23, 2018
Rating:


No comments:
Post a Comment