கனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு -
கனடா, ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பார்த்தீபன் தனது நண்பர்களுடன் கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கடலில் தவறி விழுந்ததாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுமார் ஒருமாத கால தீவிர தேடுதலின் பின்னர் அவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து பார்த்தீபனின் உறவினர்களுக்கு பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அவரது இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் ஜுலை 8 ஆம் திகதி நடைபெறும் என குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். கைதடியைப் பிறப்பிடமாக கொண்ட பார்த்தீபன் சுப்ரமணியம், தனது பத்து வயதில் கனடாவுக்கு சென்றுள்ளார்.
இசைத்துறையில் DJ கலைஞராக செயற்பட்ட பார்த்தீபன் சுப்ரமணியம் கனடாவில் அதிக தமிழர்களால் நன்கு அறியப்பட்ட ஒருவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு -
Reviewed by Author
on
July 05, 2018
Rating:

No comments:
Post a Comment