வடக்கு முதல்வரின் நியாயமான கோரிக்கை! வெளிப்படுத்தும் வடமாகாண அமைச்சர் -
மன்னாரிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன. கொள்ளை, கொலை, பாலியல் வன்புணர்வு போன்ற பல்வேறு விதமான குற்றச்செயல்கள் தொடர்ந்தும் அங்கு இடம் பெற்று வருகின்றன. குறித்த குற்றச்செயல்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரினால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலையில் இருப்பதன் பின்னணியில் அரசும், பொலிஸாரும் வேண்டும் என்றே அமைதியாக இருப்பதாக சந்தேகம் எழுகின்றது.
அண்மையில் கூட ஆறு வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 60 வயதுடைய வயோதிப தாய் ஒருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவங்களுக்கு மக்களிடம் இருந்து பல்வேறு எதிர்ப்புக்கள் வந்தன.
அதன் ஒரு வெளிப்பாடே அண்மையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் விடுதலைப் புலிகளின் உருவாக்கம் தொடர்பான கருத்து. எனினும் அந்த கருத்து தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
ஒரு அரசியல்வாதியின் தனிப்பட்ட கூற்று சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், மக்கள் கூட இவ்வாறு சிந்திக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதனை அரசாங்கம் மிகக் கவனமாக உற்று நோக்க வேண்டும்.
அண்மையில் வடக்கு முதலமைச்சர் கூட எங்களுக்கு அதிகாரத்தையும், பொலிஸ் அதிகாரத்தையும் தாருங்கள். நாங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்துகின்றோம் என கோரியிருந்தமை நியாயமானது.
ஆனால் இன்றைய சூழலில் எமது அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தரப்பட்டவர்களும் வட மாகாணசபையை அல்லது மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு முதல்வரின் நியாயமான கோரிக்கை! வெளிப்படுத்தும் வடமாகாண அமைச்சர் -
Reviewed by Author
on
July 11, 2018
Rating:

No comments:
Post a Comment