உலகக்கிண்ண கால்பந்து தொடரில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் எது தெரியுமா? -
8 போட்டிகளில் 4 போட்டிகள் முடிவு பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் பிரேசில்-மெக்சிகோ அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் நடந்து முடிந்துள்ள நாக் அவுட் சுற்றில் எந்தெந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன என்பதை பற்றி பார்ப்போம்.
- பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் மோதிய போட்டியில், பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- உருகுவே - போர்ச்சுக்கல் அணிகள் மோதிய போட்டியில், உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் மோதிய போட்டியில், ரஷ்யா பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- குரேஷியா - டென்மார்க் அணிகள் மோதிய போட்டியில், குரேஷியா பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்த ரொனால்டோவின் போர்ச்சுக்கல், மெஸ்ஸியின் அர்ஜெண்டினா ஆகிய அணிகள் வெளியேறியுள்ளதால், தற்போது உலகக்கிண்ண கால்பந்து ரசிகர்களின் கவனம் எல்லாம் நெய்மரின் பிரேசில் அணி பக்கம் திரும்பியுள்ளது.
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் எது தெரியுமா? -
Reviewed by Author
on
July 03, 2018
Rating:

No comments:
Post a Comment