தமிழகத்தை அதிரவைத்த ஹாசினி கொலை வழக்கு: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு -
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் திகதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹாசினி காணாமல் போனார்.
விசாரணையில் சிறுமியை, பக்கத்துக்கு வீட்டுக்காரரான தஷ்வந்த் பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் கொலை செய்து சடலத்தை எரித்த சம்பவத்தால் தமிழ்நாடே பதறியது.
இதனை தொடர்ந்து கொலைகாரன் தஷ்வந்தை குண்டர் சட்டத்தில் அடைத்தனர், ஆனாலும் சில மாதங்களில் ஜாமீன் தரப்பட்டது.
ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாய் சரளாவை கொன்றுவிட்டு நகைகளுடன் மும்பைக்கு தப்பிச்சென்றான்.
தொடர்ந்து மும்பையில் தஷ்வந்தை கைது செய்த பொலிசார் புழல் சிறையில் அடைத்தனர். கடந்த பிப்ரவரி 19ஆம் திகதி இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
தனது தூக்கு தண்டனையை ரத்து செய்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தஷ்வந்த் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் விதித்த தண்டனை சரியானதுதான் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர், தஷ்வந்தின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தை அதிரவைத்த ஹாசினி கொலை வழக்கு: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு -
Reviewed by Author
on
July 11, 2018
Rating:

No comments:
Post a Comment