மன்னார் மாவட்ட பிரதேச கலாசார விழாவில் கலைச்செம்மல் விருது பெற்றோர்....படங்கள்
மன்னார் மாவட்ட பிரதேச கலாசார விழாவானது 12-07-2018 நகரசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ்விழாவில் சிறப்பு நிகழ்வாக இரண்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
வழமையாக வருடாவருடம் மன்னார் பிரதேச மண்வாசணையினை பறைசாற்றும் மன்னல் ஆறாவது இதழாகவும் வெளியானது அத்துடன் மன்னார் பிரதேசத்தில் நீண்ட காலமாக கலைச்சேவையில் உள்ள கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வாக கலைச்செம்மல் விருதானது மூத்த கலைஞர்கள் 05பேருக்கும் இளம்கலைஞர்கள் 02பேருக்கும் சேர்த்து மொத்தமாக 07கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கலைச்செம்மல்விருது பெற்றோர்
- I.கிறிஸ்டி ஜோண் பொஸ்கோ-நாடகத்துறைக்காகவும்
- S.அந்தோனிப்பிள்ளை-நாடகம்-நாட்டுக்கூத்துதுறைக்காகவும்
- A.இரத்தினசிங்கம் வில்லிசை-நாடகதுறைக்காகவும்
- சூ.இ.கீதப்பொன்கலன் லியோன் நாடகம்-நாட்டுக்கூத்துதுறைக்காகவும்
- S.A.பெர்ணான்டோ(இராதாGS) அறிவிப்பு துறைக்காகவும்
- A.நிஷாந்தன் குறுந்திரைப்பட துறைக்காகவும்
- J.R.மயூரன் கவிதை துறைக்காகவும் பாராட்டி வாழ்த்தி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு சி.ஏ.மோகன்ராஸ் அவர்களுடன் பிரதேச செயலாளர் திரு.ஆ.பரமதாசன் அவர்களும் இணைந்து பொன்னாடை சந்தனமாலை அணிவித்து கலைச்செம்மல் விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தொகுப்பு- வை-கஜேந்திரன்-

மன்னார் மாவட்ட பிரதேச கலாசார விழாவில் கலைச்செம்மல் விருது பெற்றோர்....படங்கள்
Reviewed by Author
on
July 14, 2018
Rating:

No comments:
Post a Comment