141 அகதிகளுடன் அலைக்கழிக்கப்படும் மீட்பு படகு: பிரான்சில் ஆதரவும் எதிர்ப்பும் -
கடந்த முறை அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஸ்பெயின், இம்முறை அகதிகள் படகை வரவேற்க இயலாது என மறுத்து விட்டது.
இந்நிலையில் பிரான்சின் ஒரு பகுதியான Corsica தீவின் உள்ளூர் தலைவர்கள் அகதிகளை வரவேற்க முன்வந்துள்ளனர்.
பிரான்ஸ் - ஜேர்மனி தொண்டு நிறுவனங்களால் இயக்கப்படும் மீட்பு படகான அக்வேரியஸ் வெள்ளிக்கிழமையிலிருந்தே மால்டாவிற்கும் இத்தாலிக்கும் இடையே அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.
தண்ணீரில் கவிழ்ந்த இரண்டு படகுகளிலிருந்து அக்வேரியசால் மீட்கப்பட்ட அந்த அகதிகள் லிபியாவிலிருந்து இத்தாலி நோக்கி பயணப்பட்டவர்கள் ஆவார்கள்.
இத்தாலிய உள்துறை அமைச்சர் Matteo Salvini, அக்வேரியஸ் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் இத்தாலியில் அதற்கு இடமில்லை என்று கூறிவிட்டார்.
இத்தாலிக்கு பதிலாக அது பிரான்சுக்கோ, பிரித்தானியாவுக்கோ, ஜேர்மனிக்கோ அல்லது மால்டாவிற்கோ செல்லட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மால்டாவும் பிரித்தானியாவும்கூட அக்வேரியஸ்க்கு இடமில்லை என்று கூறிவிட்டன. இப்படி பல நாடுகளும் அக்வேரியசை ஏற்க மறுத்து வரும் நிலையில் Corsica தீவினர் அகதிகளை வரவேற்றிருந்தாலும், பிரான்ஸ் மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மக்கள் அக்வேரியசை ஏற்றுக் கொள்வதற்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்.
அதேபோல் அரசியல்வாதிகள் பலரும்கூட அக்வேரியஸ் பிரான்ஸ் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு அதை Tunisiaவுக்கு அனுப்ப வேண்டும் என்று வாதம் செய்துள்ளனர்.
141 அகதிகளுடன் அலைக்கழிக்கப்படும் மீட்பு படகு: பிரான்சில் ஆதரவும் எதிர்ப்பும் -
Reviewed by Author
on
August 17, 2018
Rating:

No comments:
Post a Comment