அண்மைய செய்திகள்

recent
-

20 ஆண்டுகளில் முதல் பதக்கம்! மகளிர் தடகளத்தில் சாதித்த டூட்டி சந்த்


ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீ தடகளப் போட்டியில் இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளி வென்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பெங்க் நகரங்களில் நடந்து வருகிறது.
இன்றைய போட்டியில் இந்தியா சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 400 மீ, மகளிர் 100 மீ தடகளப் போட்டிகளில் வீரர்கள் பதக்கம் வென்றனர்.

பாலினம் குறித்த சர்ச்சையில் சிக்கிய அந்த பிரச்னையிலிருந்து மீண்ட டூட்டி சந்த், 100 மீ தடகளப் போட்டியில் வெள்ளி வென்று சாதித்துள்ளார். ஆசியப் போட்டியின் 100 மீ தடகளப் பிரிவில் கடந்த 20 ஆண்டுகள் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
பந்தய தூரத்தை அவர் 11.32 விநாடிகளில் அவர் கடந்தார். பஹ்ரைனின் எடிடியாங் தங்கமும், சீனாவின் வீ யாங்க்லி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

அதேபோல், மகளிர் 400மீ பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான இளம் வீராங்கனை ஹிமா தாஸ், 50.59 விநாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இது தேசிய அளவில் சாதனையாகும். அதேபோல், ஆண்கள் 400 மீ தடகளப் போட்டியில் பந்தய தூரத்தை 45.69 விநாடிகளில் கடந்த முகமது அனஸ், வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

இதன்மூலம், இந்திய அணி 36 பதக்கங்களுடன் 9வது இடத்தில் இருக்கிறது. இதில், 7 தங்கம், 10 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
10,000 ஆண்கள் தடகளப் போட்டியில் இந்திய வீரர் லட்சுமணன் கோவிந்தன், வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளில் முதல் பதக்கம்! மகளிர் தடகளத்தில் சாதித்த டூட்டி சந்த் Reviewed by Author on August 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.